dinamalar telegram
Advertisement

சிலவரி செய்திகள்

Share
தொழிலாளி கழுத்தறுத்து கொலைராசிபுரம், ராசிபுரத்தில் நள்ளிரவில் தொழிலாளி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வெங்கடசாமி தெருவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஈஸ்வரன், 26. இவரது மனைவி சுகன்யா, 21. இவர், பட்டணத்தில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். ஈஸ்வரன் இரவு நண்பர்களுடன் மது அருந்தி விட்டு, பின் வீட்டிற்கு வந்து படுத்துள்ளார். இரவு, 11:00 மணியளவில் ஈஸ்வரன் தம்பி ஆனந்தவேல் மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, அங்கே ஈஸ்வரன் கழுத்தறுபட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். நாமக்கல் எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி நேரில் வந்து விசாரணை நடத்தினார். ராசிபுரம் முக்கிய பகுதியில் நடந்த கொலை சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குழந்தை பெற்ற பள்ளி மாணவி வாலிபர் போக்சோவில் கைதுநாமகிரிப்பேட்டை, -கொல்லிமலை பூசனிக்குழிக்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி தம்பதியின், 17 வயது மகள், முள்ளுக்குறிச்சி மலைவாழ் மக்கள் உண்டு உறைவிடப்பள்ளியில், பிளஸ் 2 படித்து வருகிறார். தற்போது, தேர்வு நடந்து வரும் நிலையில், சில நாட்களுக்கு முன், மாணவி வயிற்று வலி என்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது, பெண் குழந்தை பெற்றெடுத்தார்.இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், ராசிபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மாணவி கர்ப்பமாக்கிய, கொல்லிமலை, ஆலத்துார் நாடு பகுதியைச் சேர்ந்த அஜித், 19, என்பவரை, நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
கல்லுாரி பஸ் மோதி விவசாயி பரிதாப பலிப.வேலுார்,-ப.வேலுார் அருகே சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன், 65. விவசாயி. இவர் நேற்று முன்தினம் நாமக்கல் செல்ல, கரூர்-- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். பரமத்தி அருகே உள்ள காரைக்கால் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற தனியார் கல்லுாரி பஸ், எதிர்பாராதவிதமாக முருகேசன் சென்ற பைக் மீது மோதியது.இதில் படுகாயம் அடைந்த அவர், நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து குறித்து பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.
இளம்பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணைநாமகிரிப்பேட்டை,-நாமகிரிப்பேட்டை அருகே ஊத்துப்புளிகாட்டைச் சேர்ந்தவர் அஜித்குமார், 29. கூலித்தொழிலாளி. இவரது மனைவி கிருத்திகா, 26. இவர்களுக்கு, 2 குழந்தைகள் உள்ளனர். அஜித்குமாருக்கு குடிப்பழக்கம் உள்ளதால், அடிக்கடி குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்துள்ளார்.இதனால் விரக்தி அடைந்த கிருத்திகா, நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மங்களபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். கிருத்திகாவுக்கு திருமணமாகி, 3 ஆண்டுகளே ஆவதால், ஆர்.டி.ஓ., விசாரணையும் நடக்கிறது.
ஆம்னியில் 1,500 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்: டிரைவர் கைதுநாமக்கல்,-நாமக்கல் உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் எஸ்.ஐ., அகிலன் தலைமையில், தனித்துறை தாசில்தார் ஆனந்தன், ஆர்.ஐ., சியாம்சுந்தர் ஆகியோர் அடங்கிய குழுவினர், நேற்று காலை, 8:00 மணிக்கு, நாமக்கல் மேட்டுத்தெரு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த, ஆம்னி காரை சோதனை செய்தனர்.அதில், பிளாஸ்டிக் சாக்கு மூட்டையில், 1,500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்ப்பட்டது. ஆம்னி காரை ஓட்டி வந்த, வள்ளிபுரத்தில் வசித்து வரும் டிரைவர் செல்வம், 48, என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஆம்னி கார் உரிமையாளர் ராஜேசை தேடி வருகின்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement