பெண்ணை வெட்டிய கள்ளக்காதலன் கைது
ஸ்ரீபெரும்புதுார் : படப்பையில் பெண்ணை வெட்டிய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பகுதியை சேர்ந்தவர் அம்சா, 44. இவர், கணவரை பிரிந்து, தாம்பரம் அருகே, படப்பை, அண்ணா நகரில், தாயுடன் வசித்து வந்தார்.இந்நிலையில், படப்பை, காமராஜர் தெருவை சேர்ந்த சலாவுத்தீன், 45, என்பவர், மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
அம்சாவுக்கும், சலாவுத்தீனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருவரும் பழகி வந்தனர்.இந்நிலையில், அம்சாவுக்கு, வேறு நபருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, சலாவுதீன், அம்சாவிடம் கேட்டபோது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சலாவுதீன், கத்தியால் அம்சாவை, கடந்த 12ம் தேதி வெட்டினார்.இதில், பலத்த வெட்டு காயம் அடைந்த அம்சா, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மணிமங்கலம் போலீசார், சலாவுதீனை நேற்று கைது செய்தனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!