செயல் அலுவலருக்கு பதவி உயர்வு
நாமக்கல்,-ஹிந்து சமய அறநிலையத்துறையில், செயல் அலுவலர்களுக்கு, உதவி கமிஷனர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.அதன்படி, ஈரோடு, கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ரமேஷ், உதவி கமிஷனராக நாமக்கல்லுக்கும், ஈரோடு சென்னிமலை சுப்ரமணியர் கோவிலில் பணியாற்றிய ரமணிகாந்தன், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதேபோல் மேச்சேரி பத்ரகாளியம்மன் கோவிலில் பணிபுரிந்த சந்திரன், கடலுார் உதவி கமிஷனராகவும், தர்மபுரி குமாரசாமிபேட்டை சிவசுப்ரமணியர் கோவிலில் பணியாற்றிய ராஜா, சேலம் உதவி கமிஷனராகவும், நாமக்கல் நரசிம்மர் கோவில் கண்காணிப்பாளர் உதயகுமார், தர்மபுரி உதவி கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, முதன்மை செயலர் சந்தரமோகன் பிறப்பித்துள்ளார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!