ரூ.32 லட்சம் மதிப்பில் வடிகால், சாலைப்பணி
அரியாங்குப்பம் : தவளக்குப்பத்தில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் மற்றும் தார் சாலை அமைக்கும் பணியை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார்.தவளக்குப்பம் காந்தி நகரில் ரூ. 16 லட்சம், முத்து முதலியார் நகரில் ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் மற்றும் தார் சாலைகள் அமைக்கப்பட உள்ளது.இதற்கான பணிகளை சபாநாயகர் செல்வம் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் முன்னிலை வகித்தார். உதவிப் பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர் சரஸ்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!