Load Image
dinamalar telegram
Advertisement

மின் கட்டண சலுகை பெறுங்கள்; தொழிற்சாலைகளுக்கு அழைப்பு


சந்தாபுரா : ''சலுகை கட்டணத்தில் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ள வேண்டும்,'' என பெஸ்காம் நிர்வாக இயக்குனர் ராஜேந்திர சோழன் கேட்டு கொண்டார்.பெங்களூரு சந்தாபுரா தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகள் முக்கியஸ்தர்களுடன், பெஸ்காம் நிர்வாக இயக்குனர் ராஜேந்திர சோழன் நேற்று ஆலோசனை நடத்தினார்.



கூட்டத்தில் அதிக அளவில் மின்சாரம் பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவது, அரசின் சலுகை வழங்குவது குறித்து கலந்துரையாடல் நடந்தது.அப்போது ராஜேந்திர சோழன் பேசியதாவது:சலுகை கட்டணத்தில் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ள வேண்டும். சலுகை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த குழு அமைக்கப்படும். இக்குழு தொழில்துறையினரை சந்தித்து மின் பயன்பாடுகள் குறித்த தகவல்களை வழங்கும். இது தொழில்துறையினர் தள்ளுபடியில் மின்சார சேவையை பெறுவதற்கு உதவும்.தடையின்றி மின்சாரம் வினியோகம் குறித்து அவ்வப்போது மண்டல அதிகாரிகள், தொழில்துறையினருடன் ஆலோசனை நடத்துவர்.சீரான மின்சாரம் வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement