மொபைல் போன் திருடியமுதியவருக்கு காப்பு
மதுராந்தகம் : மதுராந்தகத்தில் மொபைல் போன் மற்றும் நகைகள் திருடிய முதியவரை, பொதுமக்கள் பிடித்து, காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த தயாளன் மற்றும் அவரது மனைவி, செங்கல்பட்டு செல்வதற்காக, பேருந்து ஏறினர்.பேருந்து நிலையத்தில் சுற்றி வந்த, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியைச் சேர்ந்த மணி, 67 என்பவரும், அவர்கள் ஏறிய பேருந்தில் ஏறினார்.சிறிது நேரம் கழித்து, தயாளன் பையில் இருந்த இருந்த மொபைல் போனை, முதியவர் மணி திருடினார்.
இதை பார்த்த சக பயணியர், அவரை பிடித்து, மதுராந்தகம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.அவரிடமிருந்த 10க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் மற்றும் நகைகளை, பறிமுதல் செய்த போலீசார், மணியை கைது செய்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!