dinamalar telegram
Advertisement

குறைதீர் முகாமில் 400 பேர் மனு அளிப்பு

Share

ஸ்ரீபெரும்புதுார் : வடக்குப்பட்டு ஊராட்சியில், நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், ரேஷன் கார்டு குறைதீர் முகாம், நேற்று நடந்தது.குன்றத்துார் ஒன்றியம், வடக்குப்பட்டு ஊராட்சியில், உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், ரேஷன் கார்டு குறித்த பொதுமக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது.வடக்குப்பட்டு ஊராட்சி தலைவர் நந்தினி தலைமை தாங்கினார்.

வட்ட வழங்கல் அலுவலர் சுதாகர், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.இந்த முகாமில், புதிய ரேஷன் கார்டு, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், மொபைல் போன் எண் சேர்த்தல் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். துணைத் தலைவர் ஏகாம்பரம் உட்பட பலர் முகாமில் பங்கேற்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement