dinamalar telegram
Advertisement

திரவுபதியம்மன் கோவிலில்இன்று தெருக்கூத்து நாடகம்

Share

மதுராந்தகம் : மோச்சேரி திரவுபதியம்மன் கோவிலில், இன்று முதல் 10 நாட்களுக்கு, தெருக்கூத்து நாடகம் நடக்கிறது.மதுராந்தகம் அடுத்த மோச்சேரியில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. மஹாபாரத அக்னி வசந்த திருவிழா, இம்மாதம் 4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவையொட்டி, கடந்த 8ம் தேதி முதல் தினமும் மாலை 2:00 மணி முதல் 6:00 மணி வரை, மஹாபாரத சொற்பொழிவாற்று நிகழ்ச்சி நடக்கிறது.


விழாவின் மற்றொரு நிகழ்ச்சியாக, இன்று முதல், மே 25 வரை, 10 நாட்களுக்கு, தினமும் இரவு 10:00 மணிக்கு, பாரத மாதா நாடக சபாவின் தெருக்கூத்து நாடக மன்றத்தினரின் தெருக்கூத்து நாடகம் நடக்கிறது.முதல் நாளான இன்று இரவு 'ஜலக்கரடி' என்ற தலைப்பில் நாடகம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, திரவுபதியம்மன் கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர்கள் செய்துள்ளனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement