வட்டார கல்வி அலுவலகம் புது கட்டடத்தில் துவக்கம்
வாலாஜாபாத் : வாலாஜாபாத் வட்டார கல்வி அலுவலகத்தை, உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.வாலாஜாபாத் வட்டார வேளாண் அலுவலக வளாகத்தில், சிமென்ட் மேற்கூரை வேயப்பட்ட கட்டடத்தில், வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வந்தது.
இங்கு, போதிய வசதி இல்லை என்பதால், பழைய தாலுகா அலுவலகம் இயங்கி வந்த வட்டார வளர்ச்சி அலுவலக கட்டடத்தில், வட்டார கல்வி அலுவலகம் இயங்குவதற்கு, துறை சார்பில் அனுமதி கோரப்பட்டு இருந்தது.கலெக்டரின் அனுமயின்படி, பழைய தாலுகா அலுவலக கட்டடத்தில், வட்டார கல்வி அலுவலகம் நேற்று துவங்கியது.இதன் துவக்க விழாவிற்கு, வாலாஜாபாத் வட்டார கல்வி அலுவலர் நத்தாபாய் தலைமை வகித்தார்.உத்திரமேரூர் எம்.எல்.ஏ., சுந்தர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, குத்துவிளக்கு ஏற்றி அலுவலகத்தை துவக்கி வைத்தார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!