தலைமை இல்லாத காங்.,அமைச்சர் சுனில் கிண்டல்
தாவணகரே : ''தலைவர்கள் இல்லாமல், காங்கிரஸ் அனாதையாக உள்ளது. இக்கட்சி தலைவர்கள் ஜாமினில் வெளியில் உள்ளனர்,'' என மின்சாரத்துறை அமைச்சர் சுனில்குமார் தெரிவித்தார்.தாவணகரேவில், அவர் நேற்று கூறியதாவது:காங்கிரசை முன்னடத்துவோர், யாரும் இல்லை. தலைமை இல்லாமல், தலைவர்கள், தொண்டர்கள் அனாதைகளாக உள்ளனர். இந்த கட்சி மீதான நம்பிக்கையை இழந்துள்ளனர்.
மாநிலம் மற்றும் நாட்டு மக்கள், பா.ஜ., மீதும், பிரதமர் நரேந்திர மோடி மீதும் மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளனர். காங்கிரஸ் ஊழலில் மூழ்கியுள்ளது. மாநில தலைவர்கள் முதல், தேசிய தலைவர் வரை ஜாமினில் உள்ளனர். இக்கட்சியின் எதிர்க்காலம் என்ன. நீங்களே யோசியுங்கள்.அமைச்சரவை விஸ்தரிப்பு, மாற்றியமைப்பதில், முதல்வருக்கு முழுமையான அதிகாரம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!