உள்வாங்கிய பள்ளம்; அச்சத்தில் வாகன ஓட்டிகள்
பள்ளிப்பட்டு : தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கேபிள் புதைக்கும் பணிக்காக, சாலையோரம் தோண்டப்பட்ட பள்ளம், பணி முடிந்து மூடப்பட்ட நிலையில், தற்போதைய மழையால் மீண்டும் உள்வாங்கியுள்ளது.பள்ளிப்பட்டு, சோளிங்கர் நெடுஞ்சாலையோரத்தில், இரண்டு மாதங்களுக்கு முன், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கேபிள் புதைப்பதற்காக, ராஜாநகரம் முதல், அத்திமாஞ்சேரிபேட்டை வரை பள்ளம் தோண்டப்பட்டது.
இயந்திரம் கொண்டு தோண்டப்பட்ட இந்த பள்ளம், பணிகள் முடிந்தபின் மூடப்பட்டது.ஆனால், அழுத்தமாக மண் கொட்டாததால், தற்போது பெய்து வரும் மழையால், இந்த பள்ளம் உள்வாங்கியுள்ளது. இதனால், இந்த மார்க்கத்தில் பல்வேறு பகுதியில், மீண்டும் பள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. விரைந்து பள்ளங்களை சரி செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!