புளிய மரங்களை பாதுகாக்கபொதுமக்கள் கோரிக்கை
மறைமலை நகர் : மறைமலை நகர் அடுத்த கூடலுாரில், அரசுக்கு சொந்தமான நிலத்தில் 10 புளிய மரங்கள் உள்ளன.இதில், பிள்ளையார் கோவில் தெரு பகுதியில் உள்ள ஒரு புளியமரம், கடந்த வாரம் பெய்த புயலில் விழுந்ததில், அருகில் இருந்த மாடி வீடு சேதமடைந்தது.விழுந்த மரத்தை அகற்றும் பணியில், நகராட்சி ஊழியர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், 'மரம் அகற்றப்பட்ட இடத்தில் புதிய மரக்கன்று நட வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர்.
மேலும், 'இங்குள்ள மற்ற மரங்களுக்கு இரவில் தீ வைப்பது, மரங்களின் வேர்களில் ஆசிட் ஊற்றுவது, மரங்களை வெட்டுவது உள்ளிட்ட வேலைகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அதை தடுத்த நிறுத்தி, புளிய மரங்களை பாதுகாக்க வேண்டும்' என்றனர்.பெயர் வெளியிடாத வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கூடலுாரில் விழுந்த 10 அடி அளவு சுற்றளவு உடைய ராட்சத புளிய மரத்தை, நகராட்சி ஊழியர்கள் மூலம் அப்புறப்படுத்தினோம்.அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், 'அருகில் உள்ள மற்றொரு மரத்தின் கிளைகள், ஓட்டு வீட்டின் மீது சாய்கிறது. புயல் காற்றில் விழுந்தால் பாதிப்பு ஏற்படும்' என்றார்.அதனால், அந்த மரத்தின் கிளை மட்டும் வெட்டப்பட்டது. மரம் அகற்றப்பட்ட இடத்தில், மரக்கன்று நட்டு பராமரிக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!