dinamalar telegram
Advertisement

தாவோஸ் உலக பொருளாதார மாநாடுமுதல்வர் பங்கேற்பதில் திடீர் குழப்பம்

Share

பெங்களூரு : தாவோஸ் உலக பொருளாதார உச்சி மாநாட்டில் முதல்வர் பசவராஜ் பொம்மை பங்கேற்பதில் குழப்பம் நிலவுகிறது.சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் அடுத்த வாரம் உலக பொருளாதார உச்சி மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் ஆகிய இருவருக்கு அழபை்பு விடுக்கப்பட்டிருந்தது.கர்நாடகா பா.ஜ.,வில் பெரிய அளவில் மாற்றம் நிகழ்வதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாக, பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார்.


இதனால் திடீரென லண்டன் செல்லவிருந்த பயணத்தை ரத்து செய்தார். தற்போது தாவோஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பது குறித்து பா.ஜ., மேலிடம் நேற்று வரை பச்சை கொடி காட்டவில்லை. வரும் 21ல் தாவோஸ் சென்று, 26ல் பெங்களூரு திரும்புவது முதல்வரின் திட்டமாக இருந்தது்.ஆனால், மேலிடம் பச்சைக்கொடி காட்டாததால் முதல்வருக்கே குழப்பமாக உள்ளது. இதற்கிடையில் அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் சில நாட்களுக்கு வெளி நாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று அக்கட்சி மேலிடம் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாம்.இது குறித்து முதல்வர் பெங்களூரில் நேற்று கூறியதாவது:தாவோஸ் உலக பொருளாதார உச்சி மாநாட்டில் இரண்டு முதல்வர்களுக்கு மட்டுமே அழைப்பு வந்துள்ளது. இதே வேளையில் தேர்தல்கள் நடக்கவுள்ளன. மாநாட்டில் பங்கேற்பது குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும். எத்தனை நாட்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement