dinamalar telegram
Advertisement

முட்புதர் மண்டி கிடக்கும்மதுராந்தகம் நகராட்சி சுடுகாடு

Share
மதுராந்தகம் : மதுராந்தகம் நகராட்சி சுடுகாடு பராமரிப்பில்லாததால் புதர்மண்டி காணப்படுகிறது.மதுராந்தகம் நகராட்சி, 18, 19, 20 ஆகிய வார்டுகளில் வசிப்போருக்கான சுடுகாடு மற்றும் இடுகாடு, இப்பகுதி வெங்கட்ராமன் குளம் பின்புறம் உள்ளது.போதிய பராமரிப்பின்றி முட்செடிகள் வளர்ந்து, சடலங்களை புதைக்க முடியாத நிலையில் உள்ளதால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.


இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், சடலம் புதைக்கும் இடங்களில் முட்செடிகள் வளர்ந்து, புதராக உள்ளது.சுடுகாடு மேம்பாட்டு நிதியாக, ஒவ்வொரு ஆண்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, பல லட்சம் ரூபாயை அரசு ஒதுக்குகிறது. ஆனால் அந்நிதி, சுடுகாட்டுக்கென முறையாக பயன்படுத்துவதில்லை.


சுற்றுச்சுவர், எரிமேடை இல்லாததால் மழைக்காலத்தில் எரியூட்டப்பட்ட உடல் மண் கரைந்து வெளியே தெரிகிறது.சடலங்களை, நாய்கள் தெருக்களில் இழுத்து வருகின்றன. இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.தவிர, சுடுகாட்டைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் இல்லாததால், சமூக விரோதிகள் இரவில் சீட்டு விளையாடுகின்றனர்; மது குடிக்கின்றனர். சுடுகாட்டிலுள்ள முட்செடிகளை அகற்றி, சுற்றுச்சுவர் அமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement