புகார் பெட்டி
வேகத்தடை உயரத்தை
அதிகரிக்க வலியுறுத்தல்-காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, செவிலிமேடு அரசு உயர்நிலைப் பள்ளி எதிரில் வேகத்தடை உள்ளது. கடந்த மாதம், புதிய சாலை போடும்போது, வேகத்தடை உயரத்திற்கு புதிய சாலை அமைத்துள்ளனர்.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்ந சாலையில், வேகமாக செல்லும் வாகனங்களால், பள்ளி மாணவ - மாணவியர், பொதுமக்கள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். மேலும் விபத்து நடந்து உயிர் சேதம் ஏற்படுவதற்கு முன், வேகத்தடையின் உயரத்தை அதிகரிக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆர்.திருவேங்கடம்,முன்னாள் படை வீரர், காஞ்சிபுரம்.-
கூடுதல் பேருந்துகள் இயக்கபயணியர் எதிர்பார்ப்பு-உத்திரமேரூர் - காஞ்சிபுரம் இடையே ஆணைபள்ளம், திருப்புலிவனம், வெங்கச்சேரி, மாகரல் உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் போக்குவரத்து வசதிக்காக, உத்திரமேரூர் பணிமனையில் இருந்து, அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இதை பயன்படுத்தி, தினசரி நுாற்றுக்கணக்கான பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பணிகளுக்கு செல்வோர் மற்றும் வெளியூர் செல்வோர் பயணித்து வருகின்றனர்.
ஆனால், அலுவலக நேரங்களில் போதுமான பேருந்துகள் இயக்கப்படாததால், பேருந்துகளில் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.பள்ளி மாணவர்கள் வேறு வழியின்றி, பேருந்தின் படிக்கட்டு மற்றும் மேற்கூரை மீது, ஆபத்தான வகையில் பயணம் செய்கின்றனர்.எனவே, மாணவர்களின் நலன் கருதி, கூடுதல் பேருந்துகளை இயக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்கா.ஜானகிராமன்,உத்திரமேரூர்***காரப்பேட்டை பகுதியில்கட்டாயம் பஸ் நிறுத்தணும்!-திருப்பத்துார், ஆரணி, வேலுார், பெங்களூரு, சித்துார், சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து, காஞ்சிபுரம் காரப்பேட்டை அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவனைக்கு, பல தரப்பினர் சிகிச்சைக்கு வருகின்றனர்.அரசு பேருந்துகளில் வரும் நபர்களை காரப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் இறக்குவதில்லை.
மாறாக, ஏனாத்துார் மற்றும் பொன்னேரிக்கரை பகுதியில் இறக்கிவிடுகின்றனர்.அங்கிருந்து நடந்தும், ஆட்டோவிலும் வரவேண்டி உள்ளது. இதை தவிர்க்க, அனைத்து அரசு பேருந்துகளும் காரப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்ல வேண்டும்.-எஸ்.பாண் டியன்,வேலுார்.***குடியிருப்பை சுற்றி தேங்கும்கழிவு நீரால் சுகாதார சீர்கேடு-ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
ஸ்ரீபெரும்புதுார் பேரூரட்சியில் பாதாள சாக்கடை திட்டம், ஏழு ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இதனால், குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்வதற்கு வழியில்லை.இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் அரசு ஆண்கள் பள்ளி அருகே ராஜீவ் அவென்யூ குடியிருப்பு பகுதியில் உள்ள காலி நிலத்தில் கழிவு நீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.இதுகுறித்து பல முறை ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சி மன்ற தலைவரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. -நடவடிக்கை வேண்டும்.ஆர்.கண்ணன்,ஸ்ரீபெரும்புதுார்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!