பூச்சி மருந்து தெளிக்க பயிற்சி
வாலாஜாபாத் : வேளாண் தொழில்நுட்பம் சார்பில், பூச்சி மருந்து தெளிப்பு குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில், நேற்று நடந்த முகாமிற்கு, காஞ்சிபுரம் ஒன்றிய சேர்மன் மலர்கொடி தலைமை வகித்தார்.சிறுகாவேரிபாக்கம் வேளாண் உதவி இயக்குனர் முத்துலட்சுமி, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
முகாமில் பூச்சி மருந்துகளை தெளிக்கும் போது, விவசாயிகள் முக கவசம் மற்றும் கையுறை ஆகியவற்றை பாதுகாப்பாக அணிந்து, மருந்து தெளிக்க வேண்டும்.விசை தெளிப்பானில் தெளிக்கும்போது, பாதுகாப்பு கவனம் தேவை உட்பட பல ஆலோசனைகளை, உதவி இயக்குனர் முத்துலட்சுமி எடுத்துரைத்தார்.இதில், வாலாஜாபாத், காஞ்சிபுரம் ஆகிய வட்டாரங்களைச் சேர்ந்த, 80 விவசாயிகள் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!