dinamalar telegram
Advertisement

வங்கனுாரில் கிருஷ்ண லீலை

Share

ஆர்.கே.பேட்டை : வங்கனுார் திரவுபதியம்மன் கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு, தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளது.ஆர்.கே.பேட்டை அடுத்த, வங்கனுார், திரவுபதியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.


திருவிழாவை ஒட்டி, நேற்று முன்தினம் மாலை, கிருஷ்ண பெருமான், கோபியருடன் கோலாட்டம் நடத்திய நிகழ்ச்சியை தெருக்கூத்து கலைஞர்கள் நடத்தினர்.நேற்று, அதிகாலை 4:00 மணிக்கு, பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு செய்தார். திரளான பக்தர்கள், கருடசேவையை தரிசனம் செய்தனர்.இன்று, ஞாயிற்றுக்கிழமை, காலை 10:00 மணிக்கு, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடைபெறும்.மாலை 6:00 மணிக்கு, திரவுபதியம்மனுடன் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டுள்ள பக்தர்கள், அக்னி குண்டத்தில் இறங்கி தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்ற உள்ளனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement