மாமல்லபுரம் : சென்னை அரசு காப்பகத்தில் மனநல சிகிச்சை பெறுவோர், மாமல்லபுரம் சிறபங்களை நேற்று கண்டு ரசித்தனர்.சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள, அரசு மனநல காப்பகத்தில், மனநல பாதிப்பு நோயாளிகள், சிகிச்சை பெறுகின்றனர்.
இத்தகைய குறைபாட்டை குணப்படுத்தி, அவர்கள் இயல்பு நிலையை அடைய, உளவியல் சிகிச்சையுடன், புத்துணர்வு அளிப்பதற்கான பிற நடைமுறைகளும் உண்டு.அந்த வகையில், அவர்களை மகிழ்விக்க, வெளியிடங்களுக்கு சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவர். இரு ஆண்டுகளாக, கொரோனா தொற்று பரவலால், இவர்கள் சுற்றுலா தடைபட்டது.நேற்று, சென்னை கார்கோ பிரண்ட்ஸ் அசோசியேஷன் பிரதிநிதிகள், ஆண், பெண் நோயாளிகள் 60 பேரை, மாமல்லபுரத்திற்கு அழைத்து வந்தனர்.
காப்பக மருத்துவ அலுவலர் சங்கீதா மேற்பார்வையில், மாநகர் பேருந்தில் நேற்று காலை சென்னையில் புறப்பட்டு, ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.தொடர்ந்து, சாலவான்குப்பம் புலிக்குகை பகுதியில் மதிய உணவு உண்டு, அப்பகுதி கடற்கரையில், கால்களை தழுவிய அலைகளை ரசித்தனர். .
மாலையில் மாமல்லபுரம் ஐந்து ரதங்கள் உள்ளிட்ட சிற்பங்களை கண்டு ரசித்தனர்.குழந்தை மனநிலையில், சிற்ப பாறையில் ஏறி, சிற்பங்களை தடவி, குதுாகலித்து மகிழ்ந்தனர்.வெளியுலகை காணாத அவர்களுக்கு, சுற்றுலா செல்வது விவரிக்க இயலாத மகிழ்ச்சியளிக்கும் என, மருத்துவ அலுவலர் சங்கீதா தெரிவித்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!