குப்பையை அகற்ற கட்டணம்மாநகராட்சி அதிகாரிகள் முடிவு
மதுரை -திடக்கழிவு மேலாண்மை விதியில் குப்பையை உருவாக்கும் நபர்கள், நிறுவனங்களின் பொறுப்புகள், கடமைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தி) அதிக குப்பையை உருவாக்கும் உணவகங்கள், தங்கும் விடுதிகள், மருத்துவ மனைகள், திருமண மண்டபங்கள், பெரிய வணிக நிறுவனங்கள், குடியிருப்புகளின் உரிமையாளர்கள், குடியிருப்போர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. உதவி கமிஷனர் மனோகரன் தலைமை வகித்தார்.குப்பையை மட்கும், மட்காத, அபாயகரமானது என பிரித்து மட்கும் குப்பையை சொந்த செலவில் அகற்ற அல்லது உரிய கட்டணம் செலுத்தி மாநகராட்சி உதவியுடன் அப்புறப்படுத்த வேண்டும். மட்கும் குப்பையை தங்கள் வளாகத்திலேயே மாநகராட்சி வழிகாட்டுதல்படி உரமாக அல்லது உயிரி வாயுவாக மாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. சுகாதார அலுவலர் வீரன், சுகாதார ஆய்வாளர்கள் ரமேஷ், செல்வக்குமார், கவிதா பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!