நைட்டிங்கேல் விருது: லண்டன் நர்ஸ் பெருமிதம்
மதுரை -'தமிழக நர்ஸ்களுக்கு பிளாரென்ஸ் நைட்டிங்கேல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்த நிலையில் முதல்வர் அத்தகைய விருது வழங்கப்படும் எனக் கூறியது சந்தோஷம்' என லண்டனில் பிளாரென்ஸ் நைட்டிங்கேல் விருது பெற்ற மதுரை சிலைமான் டேனியல் தெரிவித்தார்.லண்டனில் நர்சாக பணியாற்றும் இவர், தமிழகம் வந்த போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். டேனியல் கூறுகையில்,'' முதல்வரை சந்தித்த போது தமிழக நர்ஸ்களுக்கும் இது போன்ற ஒரு அங்கீகாரம் வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தேன். தற்போது நைட்டிங்கேல் விருது வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த நர்ஸ்க்கு ஒரு நர்ஸாக நானும் பரிசு வழங்க விரும்புகிறேன்'' என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!