dinamalar telegram
Advertisement

கோவில், பஸ் நிலையங்களில் மாஸ் கிளீனிங் துவக்கம்

Share

மாமல்லபுரம் : செங்கல்பட்டு மாவட்ட பேரூராட்சி பகுதிகளில், 'மாஸ் கிளீனிங்' எனும் ஒட்டுமொத்த துாய்மை பணி நேற்று நடந்தது. கோவில், பேருந்து நிலையம் என, பொதுமக்கள் கூடும் இடங்களில், துாய்மை பணியாளர்கள் சுகாதார பணிகளில் ஈடுபட்டனர்


பேரூராட்சி பகுதிகளில் தெருக்கள், பொது இடங்களில், துாய்மை பணியாளர்கள் தினமும் குப்பை அகற்றி துாய்மைப்படுத்துகின்றனர். ஆனாலும், பொது இடங்களில் குப்பை அதிகரிக்கிறது.இதை தவிர்க்க, அனைத்து பேரூராட்சி பகுதிகளிலும், மாதத்தில் இரண்டாம், நான்காம் சனிக்கிழமை நாட்களில், தீவிர துாய்மை பணி மேற்கொள்ள, பேரூராட்சிகள் இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.கோவில், பேருந்து நிலையம், பொதுமக்கள் கூடும் இடங்களில் குப்பை அகற்றி, எப்போதுமே துாய்மை, பிளாஸ்டிக் தவிர்க்க விழிப்புணர்வு பேரணி செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி, மாமல்லபுரத்தில் ஸ்தலசயன பெருமாள் கோவில் வளாகம் மற்றும் கடற்கரையில் துாய்மை பணியில் ஈடுபட்ட துாய்மை பணியாளர்கள், குளோரின் பவுடர் துாவினர். பேரணி சென்று, துண்டு பிரசுரம் வழங்கி, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.திருக்கழுக்குன்றம், பக்தவத்சலேஸ்வரர் கோவில் வளாகம், பேருந்து நிலைய பகுதிகளை துாய்மைப்படுத்தி, பேரணி சென்றனர்.இப்பணிகளை, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் வில்லியம் ஏசுதாஸ் ஆய்வு செய்தார். செயல் அலுவலர்கள் கணேஷ், ஜெயகுமார், பேரூராட்சித் தலைவர்கள் வளர்மதி, யுவராஜ், பேரூராட்சிகள் மன்றத்தினர் பங்கேற்றனர்.திருப்போரூர் பேரூராட்சியில், தலைவர் தேவராஜ் தலைமையில், பேரூராட்சி ஊழியர்கள் 60 பேர் பங்கேற்று, பேருந்து நிலையம், கந்த சுவாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் துாய்மை பணி மேற்கொண்டனர்.

ஆய்வு

திருப்போரூர் பேரூராட்சி தலைவர், சுகாதார மேற்பார்வையாளர் அனைவரும், பேருந்து நிலையத்தில் குப்பை குவியும் பகுதிகள், வணிக கடைகள் உள்ளிட்ட இடங்கள் துாய்மையாக இருக்கின்றனவா என ஆய்வு செய்தனர்.அப்போது பேருந்து நிலையத்தில், நிறுத்தத்தில் வாகனங்களை நிறுத்தாமல், பேருந்து போக்குவரத்துக்கும், பயணியருக்கும் இடையூறாக நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை, போலீசாரை வைத்து அப்புறப்படுத்தினர்.கழிப்பறை, பாலுாட்டும் அறையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, ஆலோசனைகள் மேற்கொண்டனர்.

Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement