dinamalar telegram
Advertisement

கார் மோதி வியாபாரி உயிரிழப்பு

Share


திருத்தணி : மாநில நெடுஞ்சாலையோரம் நடைபயிற்சி மேற்கொண்ட அரிசி கடை உரிமையாளர் மீது, கார் மோதியதில், அவர் இறந்தார்.திருத்தணி வ.உ.சி., தெருவில் வசிப்பவர் குப்புசாமி, 71. இவர், திருத்தணி ம.பொ.சி., சாலை, காமராஜர் காய்கறி மார்க்கெட் வளாகத்தில் அரிசி கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார்.தினந்தோறும் குப்புசாமி வீட்டிலிருந்து கடை வரை காலையில் அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையோரமாக நடந்து வருவார்.பின், நடைபயிற்சியாக வீட்டிற்கு செல்வார்.


அந்த வகையில் நேற்று காலை 6:00 மணிக்கு குப்புசாமி வீட்டில் இருந்து அரக்கோணம் சாலையோரமாக திருத்தணி பஜாருக்கு நடந்து வந்துக் கொண்டிருந்தார்.அப்போது, காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் சாலை வழியாக, திருத்தணி நோக்கி வந்த 'மகேந்திரா பொலிரோ' கார், குப்புசாமியின் மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த அவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளித்தும் பலனின்றி இறந்தார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து விசாரிக்கின்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement