Load Image
dinamalar telegram
Advertisement

சாம்ராஜ்நகர் சாமராஜேஸ்வரர் கோவிலுக்கு புதிய ரதம் வந்துள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி


சாம்ராஜ்நகர் : புதிதாக உருவாக்கப்பட்ட, சாம ராஜேஸ்வரர் புதிய ரதம் சாம்ராஜ்நகரை வந்தடைந்தது. கலை நயத்துடன் உருவாக்கப்பட்ட ரதத்தை, பக்தர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.சாம்ராஜ்நகரில் உள்ள, சாமராஜேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. கோவில் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரதத்துக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன் தீ வைத்ததால், பெரும்பகுதி எரிந்தது.



இதை வைத்து ரத உற்சவம் நடத்துவது சரியல்ல. புதிய ரதம் உருவாக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தினர்.இதன்படி அன்றைய முதல்வர் சித்தராமையா, 1.20 கோடி ரூபாய் நிதி வழங்கினார். ரதத்தை புதிதாக உருவாக்கும் பணி துவக்கப்பட்டது. பெங்களூரை சேர்ந்த ரத சிற்பி சிவகுமார் படிகேர், சாமராஜேஸ்வரர் ரதத்தை உருவாக்கினார். நேற்று முன் தினம் ரதம், கோவிலை வந்தடைத்தது. ரதத்துக்கு பூஜை செய்தனர்.அதன்பின் சந்தேமரஹள்ளி சதுக்கம், டிவியேஷன் சாலை, கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் நிலையம், குண்டுலு பேட் சதுக்கம், தொட்டங்கடி வீதி வழியாக ஊர்வலம் வந்தது. புதிய ரதத்தில் செதுக்கியுள்ள கடவுள் உருவங்கள், பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.ஐந்து ஆண்டுகளாக, இக்கோவிலில் ரத உற்சவம் நடக்கவில்லை. பூஜை, புனஸ்காரங்கள் மட்டும் நடந்தது. தற்போது புதிய ரதம் வந்துள்ளதால், கன்னட ஆடி மாதம் ரத உற்சவம் நடக்கும் என பக்தர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement