ADVERTISEMENT
பொன்னேரி : 'பழமையான கோவில்களில் விரைவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்' என, போது, அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று, மீஞ்சூர், பழவேற்காடு, திருப்பாலைவனம் ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.எம்.எல்.ஏ.,க்கள் டி.ஜெ.கோவிந்தராஜன், துரை சந்திரசேகர் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த, மேலுாரில் உள்ள திருவுடையம்மன், பழவேற்காடு ஆதிநாராயண பெருமாள், சமஈஸ்வரர் கோவில், திருப்பாலைவனம் திருபாலீஸ்வரர் ஆகிய நான்கு கோவில்களில் ஆய்வு மேற்கொண்டார். கோவில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து அர்ச்சகர்கள், மக்களிடம் கேட்டறிந்தார்.ஆய்விற்கு பின் தெரிவித்ததாவது:தமிழகத்தில், ஒராண்டில், 2,666 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிதியாண்டில், 1,500 கோவில்களில், 1,000 கோடி ரூபாய் மதிப்பில், புனரமைப்பு பணிகள் நடைபெற உள்ளன. 1,000 ஆண்டுகள் பழமையான கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.மீஞ்சூர், திருவுடையம்மன் கோவிலில் ராஜகோபுரம் அமைப்பது குறித்தும், கோவிலுக்கு வரும் சாலைகளை சீரமைப்பது குறித்தும், தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.
பழவேற்காடு ஆதிநாராயண சுவாமி கோவிலில், 14 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு அந்த கோவிலில், திருப்பணி மேற்கொள்ள உள்ளோம். கோவிலின் பழமை மாறாமல் முழுமையாக புனரமைத்து தரப்படும்.பழவேற்காடு சமஈஸ்வரர் கோவிலும், 1,000 ஆண்டுகள் பழமையானது. அந்த கோவிலினையும் புனரமைத்து, கோவிலுக்கு வரும் அணுகு சாலைகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் கோவில், 2007ம் ஆண்டு, கும்பாபிஷேகம் நடந்துள்ளது.
இந்த ஆண்டு கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில், இந்த ஆண்டு, 8 கோடி ரூபாயில், தங்க ரதம் செய்ய அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே கோவிலில், 150 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது.சிறுவாபுரி முருகன் கோவில் கும்பாபிஷேக தேதியும் விரைவில் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து (8)
ஒன்றிய அரசுக்கு நாங்க மத சார்பற்ற அரசுன்னு காண்பிக்க ஜால்ரா அடித்தது எல்லாம் போதும், இதை வைத்து ஏழைகளின் வயிறு நிறையாது, உருப்படியாக இந்த காசை மக்களுக்கு ஏதாவது செய்யுங்கள், திரும்பவும் கோவிலு, கும்பாபிஷேகம்னு சொல்லி பக்தர்கள்கிட்டேயிருந்து பணத்தை புடுங்கி அந்த ஒருசாராரை மாத்திரம் குஷி படுத்த நினைக்க வேண்டாம். இது காலம் காலமாக நடந்துகொண்டேதானே இருக்கிறது. அவர்களுக்கு தெரியாதா எப்படி வசூல் செய்வது என்று?
பள்ளிவாசல்களும் சர்ச்களும் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை, நல்லவேளையாக
இது ஸ்டாலினின் kitchen cabinet லிருந்து வந்த உத்தரவு. புரிய வேண்டியவர்களுக்கு புரியும். பழைய நேர்த்திக்கடன் இவையெல்லாம்.
ஒரு பக்கம் இராமாயணம் படிக்கலாம், மறு புறம் பெருமாள் கோவிலை இடிக்கலாம், இரண்டுக்கும் பலன் உண்டு செய்பவர்கள் யாராக இருந்தாலும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இதை மட்டுமே செய்து கொண்டு இருந்தால் மக்களின் பிரச்சினை தீர்ந்து விடுமா? நாங்கள் ஹிந்து மதத்துக்கு எதிரானவர்கள் அல்ல என்பதை சும்மா காண்பித்தவரை போதும். இதுபோல கும்பஅபிஷேகம் செய்து தான் நீங்கள் ஒன்றிய அரசை குஷி படுத்த வேண்டும் என்பது இல்லை, உருப்படியாக ஏழைகளுக்கு ஏதாவது செய்யவும்.