dinamalar telegram
Advertisement

திருத்தணி உதவி செயற்பொறியாளர் பொறுப்பேற்பு

Share

திருத்தணி : திருத்தணி பொதுப்பணித் துறையின் கட்டடம் மற்றும் பராமரிப்பு துறையில் பணியாற்றி வந்த உதவி செயற் பொறியாளர், அரசு, கடந்த, 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதவி உயர்வு பெற்று, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.இதையடுத்து, மூன்று ஆண்டுகளாக இந்த பணியிடம் நிரப்பப்படாமல் காலியாக இருந்தது.


இந்நிலையில், திருத்தணி பொதுப்பணித் துறை கட்டடம் மற்றும் பராமரிப்பு துறை, புதிய உதவி செயற்பொறியாளராக முரளி, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.இவர், சென்னை தலைமை செயலகத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வந்தவர். பதவி உயர்வு பெற்று, திருத்தணி உதவி செயற்பொறியாளராக நியமிக்கப்பட்டார்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement