விபத்தில் ஒருவர் பலி
திருவள்ளூர் : மணவாள நகர், மேல்நல்லாத்துார் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில், நேற்று முன்தினம், 50 வயது மதிக்கத்தக்கவர் நின்றிருந்தார்.அப்போது, அவர் மீது, லாரி மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இச்சம்பவம் குறித்து, மேல்நல்லாத்துார் வருவாய் ஆய்வாளர் விஷ்ணு பிரியா அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!