மகப்பேறு வார்டில் பாஸ் திருடும் பலே திருடிகள்
மதுரை -மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில் கர்ப்பிணிகள் அனுமதிக்கப்படும் போது வழங்கப்படும் 'அட்டென்டர் பாஸ்' எத்தனை நாட்களுக்கு செல்லும் என்ற தகவல் இல்லாததால் வெளிநபர்கள் உள்ளே நுழைந்து நகை, அலைபேசிகளை திருடுகின்றனர்.கர்ப்பிணி அல்லது குழந்தை பெற்ற பெண்ணுடன் பெண் உறவினர் உடனிருக்க மஞ்சள் நிறத்தில் 'அட்டென்டர் பாஸ்' வழங்கப்படுகிறது. அதில் கர்ப்பிணி பெயர், முகவரி, அலைபேசி எண் எழுதப்பட்டிருக்கும். சிலர் பாஸ் தொலைந்து விட்டதென கேட்கும் போது அவர்களிடம் எழுதி வாங்கி 'டூப்ளிகேட்' பாஸ் வழங்கப்படுகிறது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் போது இந்த அட்டையை வார்டு செக்யூரிட்டியிடம் ஒப்படைக்க வேண்டும்.மாலை 4:00 முதல் 6:00 மணி வரை பார்வையாளர்களுக்கு பாஸ் இல்லாமல் அனுமதி உண்டு. இந்த நேரத்தில் உள்ளே நுழையும் சில பெண்கள் வார்டிலுள்ள பெண் உறவினர்களின் பாைஸ திருடிக் கொண்டு வார்டு வார்டாக சென்று திருட்டுச் செயலில் ஈடுபடுகின்றனர். சில நாட்களுக்கு முன் குழந்தை பெற்ற பெண்ணின் தாலிக்கயிற்றை திருடிய பெண் பிடிபட்டார். அவரிடம் 'பாஸ்' இருந்ததால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.சுகப்பிரசவம் எனில் 3 நாட்களும், அறுவை சிகிச்சை எனில் 7 - 9 நாட்களும் வார்டில் தங்கியிருப்பர். அதற்கேற்ப பாஸில் தேதியை உத்தேசமாக குறிப்பிட்டு எழுதி கொடுத்தால் செக்யூரிட்டிகள் பாஸ் தேதியை அறிந்து கண்காணிப்பை அதிகரிக்க முடியும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!