காஞ்சி மாநகராட்சி அலுவலகத்தில்அரை கம்பத்தில் பறந்த தேசிய கொடி
காஞ்சிபுரம் : ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் காலிபா பின் சயித் அல் நஹ்யான் இறப்புக்கு, துக்கம் அனுசரிக்கும் விதமாக, காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலக கட்டடத்தில் நேற்று, அரை கம்பத்தில் தேசிய கொடி பறக்கிவிடப்பட்டது.காஞ்சிபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையில், மாநகராட்சி அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த அலுவலக கட்டடத்தில், காலையில் தேசிய கொடி ஏற்றப்பட்டு மாலையில் இறக்கப்படுவது வழக்கம். நேற்று அரை கம்பத்தில் தேசிய கொடி பறந்தது.ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் காலிபா பின் சயித் அல் நஹ்யான், நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு ஒரு நாள் துக்கம் அறிவித்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.அவருக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக, காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று, அரை கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டது.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!