dinamalar telegram
Advertisement

கவிழ்ந்தது 40 டன் இயந்திரம்போக்குவரத்து பாதிப்பு

Share
வாடிப்பட்டி,-சோழவந்தான் ராயபுரத்திலிருந்து 40 டன் எடையுள்ள கல் உடைக்கும்கிரஷர் இயந்திரத்தை ஏற்றிய லாரி, நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு கிளம்பியது. நகரி சர்வீஸ் ரோடு வழியாக மதுரை- - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் கரூர் செல்ல திரும்பியபோது கவிழ்ந்தது. 40 டன் இயந்திரத்தை சாலையில்இருந்து நகர்த்த கப்பலுார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிரேன்கள் வரவழைக்கப்பட்டன. நேற்று காலை 11:00 மணிக்கு மாற்று லாரியில் இயந்திரம் ஏற்றி அனுப்பப்பட்டது. இதனால் இவ்வழியாக சென்ற வாகனங்கள் அவ்வப்போது நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து பாதித்தது.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement