dinamalar telegram
Advertisement

தையல், மின்சாதனங்கள்பழுது நீக்கும் பயிற்சி

Share
மதுரை -மதுரை பெட்கிராட் நிறுவனம் சார்பில் 1 ஏ, அருணாச்சலம் தெரு, எஸ்.எஸ்.காலனியில் இலவச தையல் பயிற்சி வீட்டு மின்சாதனங்கள் பழுதுநீக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.தையல் பயிற்சிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்கள், பழுதுநீக்கும் பயிற்சிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 - 35 வயதுடைய இருபாலர் பங்கேற்கலாம். காலை 10:00 - மாலை 5:00 மணி வரை 70 நாட்கள் பயிற்சிக்கு பின் மத்திய, மாநில அரசுகளின் சான்றிதழ் வழங்கப்படும். ஊக்கத்தொகையும் உண்டு. சுயதொழில் தொடங்க வங்கிக்கடனுக்கு வழிகாட்டப்படும். தொடர்புக்கு: 89030 03090.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement