dinamalar telegram
Advertisement

ஞானவாபி மசூதியில் ஆய்வு பணி துவக்கம்

Share
Tamil News
வாரணாசி :வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி வளாகத் துக்குள், 'வீடியோ' பதிவுடன் கூடிய கள ஆய்வு பணி, நேற்று துவங்கியது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வாரணாசியில் உள்ள விஸ்வநாதர் கோவில் அருகே உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை உள்ளது. இந்த சிலைக்கு தினமும் பூஜை செய்ய அனுமதி கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த உள்ளூர் நீதிமன்றம், மசூதியில் கள ஆய்வு மேற்கொள்ள, ஐந்து பேர் அடங்கிய குழுவை அமைத்தது. மேலும், அறிக்கையை ௧௭ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க, உச்ச
நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்நிலையில், மசூதியில் கள ஆய்வு பணி நேற்று துவங்கியது. ஐந்து பேர் அடங்கிய குழு மேற்கொண்ட ஆய்வை மனுதாரர்கள், அவர்களது வழக்கறிஞர்கள் பார்வையிட்டனர்.
ஆய்வு பணி நடப்பதையடுத்து, மசூதியிலிருந்து 1 கிலோ மீட்டர் துாரத்துக்கு போலீசார் குவிக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆய்வு பணி இன்றும் நடக்கிறது. இதற்கிடையே, ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மசூதி நிர்வாகத்தினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, உச்ச நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து (8)

  • vijay - coimbatore,இந்தியா

    //மோடி அரசின் பொருளாதாரம் பிசுபிசுத்துவிட்டது...// தினமும் சோறு சாப்பிடுறீங்களா? இல்லை பிட்சை ..... சாப்பிடுறீங்களா?? உண்மை என்ன என்று உலகிற்கு தெரியும்

  • தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா

    பிஜேபி அரசுக்கு இதை விட்டால் வேறு என்ன தெரியும். வளர்ச்சி திட்டங்கள், கல்வி, வேலை வாய்ப்பு ,பொருளாதார முன்னேற்றத்தில் இந்தியா படு பாதாளத்திற்கு போய்விட்டது

  • yts -

    ஏன் தமிழனுக்கு மூக்கு வேற்கிறது

  • வாய்மையே வெல்லும் - மனாமா,பஹ்ரைன்

    ஞானவாபி மசூதியில் ஆய்வு பணி துவக்கம் "திருடனுக்கு தேள் கொட்டியது போல...வவுரு கலக்கும் ஒரு சாராருக்கு "

  • Jana - Chennai,இந்தியா

    இந்தியா பொருளாதாரம் படு பாதாளத்தில்.. இன்னும் விற்க கூடிய பொது சொத்து கொஞ்சம் உள்ளது அதையும் வித்து இந்து ராஷ்ட்ரிய என்ற ஒரே மந்திரம்.. மக்கள் மூடர்கள் இல்லை தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலைகளில் ஒரு பெரும் போராட்டம் தவிர்க்க முடியாது. இதுவும் கடந்து போகும்

    • ஆரூர் ரங் - ,

      உங்க எண்ணம் மனிதன் என்றால் சோற்றாலடித்த பிண்டம் மட்டுமே😏. மற்ற இறக்குமதி மதங்களுக்கு மட்டுமே பரிவு

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்