dinamalar telegram
Advertisement

டான்செட் நுழைவுத் தேர்வு: முதல் நாள் 363 பேர் ஆப்சென்ட்

Share
கோவை:எம்.பி.ஏ., எம்.சி.ஏ., உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கான, ' டான்செட்' நுழைவுத்தேர்வுகள் கோவையில் உள்ள அரசு தொழில்நுட்ப கல்லுாரி, நவாவூர் பிரிவு அண்ணா பல்கலை மண்டல வளாகம், பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி, நீலாம்பூர் பி.எஸ்.ஜி கல்லுாரி, சி.ஐ.டி., கல்லுாரி என ஐந்து மையங்களில் நடந்தன.நேற்று காலை, 10:00 முதல் 12:00 மணி வரை எம்.சி.ஏ., படிப்புக்கான நுழைவுத்தேர்வு, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்தது. தேர்வில், பங்கேற்க, 782 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். இதில், 78 பேர் தேர்வு எழுத வரவில்லை.பிற்பகல் 2:30 முதல் 4:30 மணி வரை எம்.பி.ஏ., படிப்புக்கான நுழைவுத் தேர்வு ஐந்து மையங்களில் நடந்தது. பதிவு செய்திருந்த, 2,921 பேரில், 285 பேர் தேர்வு எழுத வரவில்லை. இன்று எம்.இ., எம்.டெக்., படிப்புகளுக்கான தேர்வுகள், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில் நடக்க உள்ளன. இதில், 693 பேர் பங்கேற்க உள்ளனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement