dinamalar telegram
Advertisement

காட்டெருமை கூட்டம் அச்சமில்லாமல் வாக்கிங்

Share
Tamil News
குன்னுார்:காட்டெருமைகள் கூட்டத்தின் இடையே பலர் அச்சமில்லாமல் 'வாக்கிங்' சென்று வருகின்றனர்.நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் ராணுவ வீரர்கள் உட்பட பலர் வாக்கிங் சென்று வருகின்றனர்.இந்நிலையில், வெலிங்டன் ஏரி பூங்கா பகுதியில், காட்டெருமைகள் முகாமிட்டுள்ளன. இந்த கூட்டத்தின் இடையே பலரும் 'வாக்கிங்' சென்று வருகின்றனர்.மக்கள் கூறுகையில், 'இந்த பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் வனத்துறையினர் கண்காணித்து, காட்டெருமையை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்,' என்றனர்.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement