dinamalar telegram
Advertisement

மதம் மாற்றம்- பற்றி கவர்னர் ரிப்போர்ட்

Share
சென்னை: பட்டினப் பிரவேசம் தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்த போது, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஒரு அதிரடி காரியத்தை செய்ததாக டில்லி உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு ஒரு ரகசிய அறிக்கை அனுப்பியுள்ளாராம்.


தமிழகத்தில் மதம் சம்பந்தமாக நடைபெற்று வரும் பல பிரச்னைகளை, அந்த ரகசிய 'ரிப்போர்ட்'டில் அமித் ஷாவிற்கு தெரிவித்துள்ளாராம்.தன் அறிக்கையில், தருமபுரம் ஆதீனத்திற்கு சென்றதை குறிப்பிட்டுள்ள கவர்னர், 'பல கோவில்களுக்கு சென்றுள்ளேன்; பல சமய தலைவர்களையும் சந்தித்துள்ளேன். அவர்களிடமிருந்து பல புகார்கள் எனக்கு வந்துள்ளன.


'தமிழக அரசு ஹிந்து மத தலைவர்களையும், அவர்களது சம்பிரதாயங்களையும் மதிப்பதில்லை. தேவையில்லாமல் அரசு தலையிடுகிறது என இந்த தலைவர்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர்' என சொல்லிஇருக்கிறாராம்.அதோடு, 'தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கட்டாய மத மாற்றம் நடைபெற்று வருகிறது.


ஆனால், இது தொடர்பாக தமிழக அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. 'இது குறித்து தலைமைச் செயலரிடம் தெரிவித்துள்ளேன். ஆனால், அவரிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை' எனவும் கவர்னர், தன் அறிக்கையில் குறிப்பிட்டுஉள்ளாராம்.இது குறித்து, மத்திய அரசு விரைவில் தமிழக அரசிடம் விளக்கம் கேட்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (37)

 • Samathuvan - chennai,இந்தியா

  ஒரு சாரார் என்னாடான்னா காசையும், வசதியையும் கொடுத்து மதம் மாறச்சொல்லுறான். நம்ம என்னடான்னா தெருவா தெருவா அயல்நாடுகளில் நம்முடை வேத புத்தகங்களை கூவி கூவி டாலருல வித்து அந்த காசையெல்லாம் ஆட்டைய போடுறான். இதுமட்டும் அல்லாமல் அதை சொல்லி கொடுக்கிறேன் இதை சொல்லி கொடுக்கிறேன்னு, உடனே அவனும் சொகுசாக வாழ ஒரு ஆசிரமத்தை கட்டிய அவனை நம்பி நாமும் பக்தர்கள் போல பயித்தியகாரத்தனமா அவனிடம் எல்லா பைசாவும் இழந்து நிற்கிறோம். அப்போ எப்படி நம்ம மதம் வளரும் அவன் மட்டுமே தான் வளருவான்.

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  போலீஸ்காரர்களை குறுக்கீடு இல்லாமல் நேர்மையாக செயல்பட விட்டால் தமிழகத்தில் எல்லாம் சரியாகும். இல்லையென்றால், பஞ்சாபில் உள்ள எல்லை படைகளை தமிழகத்திற்கு கொண்டு வரவேண்டும்.

 • Vena Suna - Coimbatore,இந்தியா

  கிறிஸ்துவ மத பிரச்சாரங்கள் கூடாரமாக தமிழகம் மாறிப் போனதே. இதை உணர்ந்தே ஜெயலலிதா அன்றே மத மாற்ற தடை சட்டம் கொண்டு வந்தார்,,,அதற்கு பிரச்சினைகள் கொடுத்தனர் .அவர் தேவை இல்லாமல் பிறகு கூத்தடித்து மக்கள் ஆதரவை இழந்தார்.

 • Rafi - Riyadh,சவுதி அரேபியா

  குஜராத்தில் ஒரு மதம் அடக்குமுறையாக்கப்பட்டதை தொடர்ந்து பல மக்கள் கூட்டம்மாக இஸ்லாத்தை தழுவியதை நாடு கண்டு கொண்டிருக்கு. உண்மை எப்போதும் சிறிது தாமதித்தாலும் வெல்லும். கட்டாய மத மாற்றம் என்ற கூற்றே தோல்வியின் அடையாளம். ஏன் போகின்றார்கள் என்று சிந்திக்க மாட்டார்கள். அரசியல் சட்டத்தை எப்போது மதித்தார்கள், அரசியல் நடத்த கேவலம்மான செயலை கையிலெடுக்கின்றார்கள். அடக்குமுறை வென்றது இல்லை.

 • தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா

  ...

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்