ஊட்டி மலர் கண்காட்சி: 20ல் உள்ளூர் விடுமுறை
ஊட்டி:ஊட்டி மலர் கண்காட்சி நடக்கும், 20ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி கலெக்டர் அம்ரித் அறிக்கை: நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 124 வது மலர் கண்காட்சி, 20 முதல் 24 வரை நடக்கிறது. கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இதை தொடர்ந்து, 20ல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 20ல் பொது தேர்வுகள் வழக்கம்போல் நடக்கும். விடுமுறை நாளினை ஈடுசெய்ய ஜூன், 4ல் பணி நாளாகும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!