ஊட்டி:ஊட்டி ரோஜா கண்காட்சியில், 80 ஆயிரம் மலர்களை கொண்டு உருவாக்கப்பட்ட பல மலர் அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு ரோஜா பூங்காவில், இரு நாட்கள் ரோஜா கண்காட்சி நேற்று துவங்கியது. 4 ஆயிரம் ரகங்களில் 40 ஆயிரம் செடிகளில் பூத்திருந்த ரோஜாக்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.நீலகிரி தோட்டக்கலை சார்பில், 30 ஆயிரம் ரோஜாக்கள் வாயிலாக, 15 அடி உயரத்திற்கு அழகிய மர வீடு அமைக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் ரோஜாக்களில் மஞ்சப்பை போன்ற வடிவங்கள் வித்தியாசமாக இருந்தது.திருநெல்வேலி, திருப்பூர், மதுரை, தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, ஈரோடு, தஞ்சாவூர் ஆகிய மாவட்ட தோட்டக்கலை துறையினரால், ரோஜா மலர்களை கொண்டு குழந்தைகளை கவரும் விதமாக கார்ட்டூன் கதாபாத்திர வடிவமான, 'மோட்டு பட்லு, மான், பியானோ போன்ற, 10க்கும் மேற்பட்ட அலங்காரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
நிகழ்ச்சிகள் ரத்து
ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலிபா பின் சயீத் உடல் நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவையொட்டி துவக்கி வைக்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் அம்ரித், தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலா மேரி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கண்காட்சியை மட்டும் பார்வையிட்டு சென்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!