ADVERTISEMENT
தொண்டாமுத்தூர்:ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு துவங்கியுள்ள, 'மண் காப்போம்' இயக்கத்திற்கு, உலக முஸ்லிம்லீக் பொதுச்செயலாளர் அல் இசா ஆதரவு தெரிவித்துள்ளார்.உலகம் முழுதும் மண் அழிவை தடுக்கவும், மண் வளத்தை பாதுகாப்பதற்கு உலக நாடுகள் சட்டங்கள் இயற்ற வலியுறுத்தியும், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, 'மண் காப்போம்' இயக்கத்தை துவங்கியுள்ளார்.இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 30 ஆயிரம் கி.மீ., பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தனது பயணத்தின் போது, சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரில், உலக முஸ்லிம் லீக்கின் பொதுச்செயலாளர் அல் இசாவை சந்தித்தார்.அவரிடம் மண்ணை ஆதரியுங்கள் என, ஈஷா நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்தார்.இதனையடுத்து, உலக முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அல் இசா,''உலக முஸ்லிம் லீக்கை பொருத்தவரை, உங்களது நோக்கங்களை ஆதரிப்பதற்காக, உங்களுக்கு எந்த வகையிலும் உதவ நாங்கள் முற்றிலும் தயாராக இருக்கிறோம்,'' என தெரிவித்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!