புரி கோயில் நடைபாதை திட்டத்தை எதிர்த்து வழக்கு
புரி:ஒடிசா மாநிலம் புரி ஜகன்நாதர் கோயிலில் பாரம்பரிய நடைபாதை அமைக்கும் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதாதளம் ஆட்சி நடக்கிறது. இங்கு புரியில் பிரசித்தி பெற்ற ஜகன்நாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சகணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரும் நோக்கில் கோவில் வளாகத்தில் பாரம்பரிய நடைபாதை அமைக்க ஒடிசா அரசு முடிவு செய்து பணிகள் நடந்து வருகின்றன.
இத்திட்டத்தை எதிர்த்து ஏற்கனவே ஒடிசா உயர் நீதிமன்றம் புரி மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஆகியவற்றில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. இந்நிலையில் புரி மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்றாவது மனுவில் 'புரி கோயில் நடைபாதை திட்டத்துக்கு உரிய அனுமதி பெறாமல் ஒடிசா அரசு பணிகளை செய்து வருகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக பதில் அளிக்க கோரி ஒடிசா அரசு இந்திய தொல்லியல் துறை ஆகியவற்றுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப நீதிபதி ரவுட்ரே உத்தரவிட்டார்.விசாரணை ஜூன் 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!