கோவை;''சிதம்பரம் நடராஜர் கடவுள் குறித்து அவதுாறாக பேசி வீடியோ வெளியிட்டவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யாவிட்டால் மாநிலம் முழுதும் போராட்டம் பரவும்,'' என, பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் எச்சரித்துள்ளார்.சிதம்பரம் நடராஜர் குறித்து அவதுாறாக வீடியோ வெளிட்டவரை கைது செய்ய கோரி, கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் சிவனடியார்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தலைமை வகித்தார்.பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் பேசியதாவது:இந்து கடவுள்கள் மீதும், இந்து வழிபாட்டு நம்பிக்கைகள் மீதும் அவதுாறு பரப்பும் செயல் தொடர்கிறது. இச்செயல் சிவனடியார்களை மிகவும் வேதனைப்படுத்தி உள்ளது. கடவுள் நடராஜரை அவதுாறாக பேசியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யாவிட்டால், சிவனடியார்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் பரவும்.இவ்வாறு, மருதாசல அடிகளார் பேசினார்.பிள்ளையார் பீடம் மாணிக்க வாசக சுவாமிகள், பாபுஜி சுவாமிகள் மற்றும் சிவனடியார்கள் 300 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கோவையில் சிவனடியார்கள் ஆர்ப்பாட்டம்
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!