காத்திருப்பு பட்டியலில்போலீஸ் அதிகாரிகள்
சென்னை:சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கில் உதவி கமிஷனர், இரண்டு இன்ஸ்பெக்டர்கள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை தலைமை செயலக காலனி போலீசார், ஏப்., 18ம் தேதி கீழ்ப்பாக்கம் கெல்லீஸ் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆட்டோவில் கஞ்சா, ஆயுதங்களுடன் வந்த பட்டினப்பாக்கம் விக்னேஷ், 25, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ், 28, ஆகிய இருவரை விசாரித்தனர்.போலீசாரின் விசாரணையில் விக்னேஷ் உயிரிழந்தார். சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணையில் ஆறு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர்.
உயிரிழப்பு நடந்த தலைமை செயலக காலனி காவல் நிலையம், அயனாவரம் உதவி கமிஷனர் சரவணன் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. எனவே, உதவி கமிஷனர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். தலைமை செயலக காலனி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஆயிரம் விளக்கு இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

காத்திருப்பு பட்டியலில் போலீஸ் அதிகாரிகள்: திரு.விக்னேஷ் போலீசாரால் அடித்து கொல்லப்பட்டார் என்று உலகத்திற்க்கே தெரியும். கொலை செய்தவர்கள் போலீஸ் என்பதால் நடவடிக்கை இல்லை. அந்த போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்த்த அனைவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டு கிரிமினல் நடவடிக்கை எடுத்திருந்தால் நியாயம் நிலைநிறுத்தப்பட்டு இருக்கும் என்று சொல்லலாம். மற்ற நடவடிக்கை எல்லாமே வெறும் கண் தொடைப்பு மட்டுமே. சாதாரண மக்கள் கொலை செய்தால், அவர்களுக்கு சிறை தண்டனை. போலீஸ் கொலை செய்தல் இடமாற்றம். இடமாற்றம் எதர்கு தெரியுமா? அங்கும் போய் இன்னும் கொலைகள் செய்ய அனுமதி. வேரூன்றும் இல்லை. வாழ்க தமிழக போலீஸ். வாழ்க தமிழக அரசு.வாழ்க தமிழக டிஜிபியின் தலைமை.