கூடலுார்:கூடலுார் நாடுகாணி பகுதியில் காணப்பட்ட பல்வேறு பறவைகளால், ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.நீலகிரி மாவட்டம், நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்தை, 250 வகை பறவை இனங்கள், தங்களின் வாழ்விடமாக கொண்டுள்ளன என்பது, சமீபத்தில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது.நேற்று, 'சர்வதேச இடம் பெயரும் பறவைகள் தினம்' நீலகிரி பகுதியில் வன உயிரின ஆர்வலர்களால் நினைவு கூறப்பட்டது. சில பறவை ஆர்வலர்கள், அதிகாலையில் பறவைகள் 'போட்டோ' எடுப்பதில் ஆர்வம் காட்டினர்.கூடலுார் ஜீன்பூல் தாவர மைய வனச்சரகர் பிரசாத் கூறியதாவது: பறவைகள், காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப உணவு மற்றும் இனப் பெருக்கத்திற்காக இடம் பெயர்வது வழக்கம். மனிதர்களை சார்ந்த வனம் மற்றும் சுற்றுச்சூழல், நீர் ஆதாரங்கள், மண்வளங்களை பாதுகாத்தால், பல்வேறு பறவைகளை பாதுகாக்க முடியும்.வனச்சூழலை பாதுகாக்கும் பறவைகளுக்கு இடையூறு செய்யாமல் இருக்க வேண்டும். இன்று (நேற்று) கொண்டாடப்படும் 'சர்வதேச இடம் பெயரும் பறவைகள்' தினத்தில், இப்பகுதிக்கு வரும் மக்களிடையே பறவை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
இடம் பெயரும் பறவைகள் தினம்: பாதுகாக்க விழிப்புணர்வு
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!