dinamalar telegram
Advertisement

சமூக வலைதளம் உதவியுடன்13 வயது பள்ளிச்சிறுமி மீட்பு

Share
கோவை:பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய பள்ளிச்சிறுமியை, சமூக வலைதளம் உதவியுடன் போலீசார் மீட்டனர்.கோவையை சேர்ந்த 13 வயது பள்ளிச்சிறுமி, மொபைல் போனில் சமூக வலைதளத்தில் அதிக நேரம் செலவிட்டு வந்தார். அதை பெற்றோர் கண்டித்தனர். கோபமுற்ற மாணவி, வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். மகளை காணாமல் அதிர்ச்சியடைந்த பெற்றோர், போலீசில் புகார் தெரிவித்தனர்.விசாரித்த போலீசார், சமூக வலைதளம் மூலம் மாணவியுடன் அவரது நெருங்கிய தோழியை பேச வைத்தனர். போன் சிக்னல் மூலம் மாணவி இருக்குமிடத்தை, போலீசார் ஆய்வு செய்தனர்.
அந்த மாணவி, கோவையில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் பயணிப்பதும், அரக்கோணம் அருகே ரயில் சென்று கொண்டிருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.இதையடுத்து அரக்கோணம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காத்திருந்த போலீசார், மாணவியை மீட்டு, கோவை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.மாணவியிடம் விசாரித்தபோது, சென்னையில் இருக்கும் தோழியை பார்க்கச் சென்றதாக தெரிவித்தார். அவருக்கு தக்க அறிவுரை கூறிய போலீசார், பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement