வீட்டில் நாகப்பாம்பு :குடும்பத்தினர் அச்சம்
மேட்டுப்பாளையம்":வீட்டின் காம்பவுண்ட் சுவற்றில் பதுங்கி இருந்த, நாகப்பாம்பை பார்த்த குடும்பத்தினர், அச்சம் அடைந்தனர்.மேட்டுப்பாளையம் -ஊட்டி ரோட்டில், கல்லாறு தூரிப்பாலம் அருகே, ராஜன் குடியிருந்து வருகிறார். இவரது வீட்டின் காம்பவுண்ட் சுவற்றின் ஓரத்தில், நாகப்பாம்பு படுத்திருப்பதை பார்த்த குடும்பத்தினர், வெளியே செல்ல முடியாமல் அச்சமடைந்தனர். வன இயற்கை ஆர்வலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், பதுங்கி இருந்த, 5 அடி நாக பாம்பை பிடித்து, மேட்டுப்பாளையம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் மருந்துக் கிடங்கு வனப்பகுதியில் நாகப்பாம்பை விட்டனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!