dinamalar telegram
Advertisement

மாநகராட்சி கூட்ட தீர்மானங்களைஇணையத்தில் வெளியிட எதிர்பார்ப்பு

Share
கோவை:ஒளிவு மறைவற்ற நிர்வாகத்துக்கு, கோவை மாநகராட்சி மண்டல கூட்டங்கள் மற்றும் நிலைக்குழு கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும், இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவது வழக்கம்.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருந்ததால், தனி அலுவலர் பொறுப்பு, மாநகராட்சி கமிஷனருக்கு வழங்கப்பட்டு இருந்தது.அப்போது நிறைவேற்றிய தீர்மானங்கள் பதிவேற்றம் செய்யப்படாமல் இருந்தது. இது, கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மாநகராட்சி இணைய தளத்தில் தீர்மானங்கள் படிப்படியாக பதிவேற்றப்பட்டன. அப்போது, கடந்த ஆட்சியின் போது செய்யப்பட்ட முறைகேடுகள், தவறுகள் வெளிச்சத்துக்கு வந்தன.மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால், தனி அலுவலராக இருந்தபோது நிறைவேற்றிய தீர்மானங்கள், உள்ளாட்சி தேர்தலுக்கு பின், மேயர் கல்பனா தலைமையில் மாமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானங்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.ஆனால், மண்டல கூட்டங்கள் மற்றும் நிலைக்குழு கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கின்றன. என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பது, குழு உறுப்பினர்களுக்கே தெரியாத சூழல் நிலவுகிறது.மண்டல கூட்டங்களில், தலா, 5 லட்சம் ரூபாய் மதிப்புக்கு பல்வேறு பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, பணிகள் செய்யப்படுகின்றன.எந்தெந்த வார்டுக்கு என்னென்ன பணிகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது என்பது வெளிப்படையாக மக்களுக்கு தெரிவதில்லை.இதேபோல், நிலைக்குழு கூட்டங்களில் நிறைவேற்றும் தீர்மானங்கள் என்னவென்றே தெரிவதில்லை. ஒளிவு மறைவற்ற நிர்வாகம் இல்லாத சூழல் நிலவுகிறது.மாநகராட்சி கமிஷனராக ராஜகோபால் பொறுப்பேற்றதும், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றிய தீர்மானங்களை வெளிப்படையாக மக்கள் மன்றம் அறியும் வகையில் பதிவேற்றம் செய்தார்.அதேபோல், மண்டல கூட்டங்கள், நிலைக்குழு கூட்டங்களில் இதுவரை நிறைவேற்றிய தீர்மானங்களையும், இனி நிறைவேற்றுவதையும் உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement