தேசிய அளவிலான கலாசார விழா!
சரவணம்பட்டியில் உள்ள, சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில், தேசிய அளவிலான கலாசார விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.விழாவில், சிறந்த நிர்வாகக் குழு, அட்மாட், வினாடி வினா, குறும்படம், இணைப்பு, மைம், ஐ.பி.எல்.,ஏலம், குழு நடனம், 60 நொடிகள், ஸ்பாட் நிகழ்வுகள், சமையல், வேடிக்கை விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில், 40க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை ரொக்கப் பரிசுகள், நினைவுப் பரிசுகள் மற்றும் வெற்றியாளர் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கல்லுாரி முதல்வர் ராதிகா, அறங்காவலர் கல்யாணராமன், தென்கரை ஊராட்சி மன்றத் தலைவர், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் மகாலட்சுமி பங்கேற்றனர்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!