dinamalar telegram
Advertisement

சத்து மாத்திரை வழங்கிய டீன்

Share
கோவை:கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றும், துாய்மை பணியாளர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.கோவை அரசு மருத்துவமனை வளாகத்தை துாய்மை செய்ய, 300க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இப்பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு 'ஜின்கோவிட்' எனும் மாத்திரைகளை, அரசு மருத்துமனையின் டீன் நிர்மலா வழங்கினார். நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனையின் உதவி இருப்பிட மருத்துவ அதிகாரி மணிவண்ணன், மேலாளர் தினேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement