55 பவுன் நகை பறித்த மென்பொறியாளர் கைது
திருப்போரூர்:செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த செங்கண்மால் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் காசிவிஸ்வநாதன் 30; திருவான்மியரில் உள்ள தனியார் நிறுவன மென்பொறியாளர்.
இவருக்கும் அதே குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண் ஒருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இருவரும் தனிமையில் இருந்ததை காசிவிஸ்வநாதன் வீடியோ எடுத்துள்ளார்.அந்த வீடியோவை பெண்ணிடம் காட்டி மிரட்டி 55 பவுன் நகைகளை காசிவிஸ்வநாதன் பறித்துள்ளார். மேலும் நகை பணம் கேட்டு மிரட்டியதால் அந்த பெண் கேளம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்து காசிவிஸ்வநாதனை கைது செய்தார்.

கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!