திருப்பூர்:சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளதற்கு ஹிந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சிதம்பரம் நடராஜர் கோவிலை தீக் ஷிதர்கள் நிர்வகித்து வருகின்றனர். இந்த கோவிலை கைப்பற்ற அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து அவை தோல்வியடைந்துள்ள நிலையில் தற்போது திட்டமிட்டு கோவிலின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.சில நாட்களுக்கு முன் சிதம்பரம் நடராஜரையும் தில்லைக்காளியையும் அருவருக்கதக்க வார்த்தைகளில் இழிவாக பேசி இணையதளத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இழிவுபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அறநிலையத்துறை அமைச்சர் நடராஜர் கோவில் மீது அக்கறை உள்ளது போல நடிப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.எனவே ஹிந்து தனியார் கோவில்கள் மீது அவதுாறு பரப்பும் முயற்சிகளை கைவிட வேண்டும். இக்கோவிலை அவமதித்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!