dinamalar telegram
Advertisement

துணை ஜனாதிபதி இன்று கோவை வருகை

Share
கோவை:துணை ஜனாதிபதி கோவை வருகை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர், இன்று மாலை கோவை வருகிறார்.துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, நேற்று கோவை வருவதாகவும், இன்று காலை புறப்பட்டு ஊட்டி செல்வதாகவும், அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி கோவை மாநகரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில், தவிர்க்க இயலாத காரணங்களால் துணை ஜனாதிபதி வருகை ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அவர், இன்று மாலை கோவை வருகிறார். அரசு விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர், நாளை காலை புறப்பட்டு ஊட்டி செல்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், இன்று மாலை 5:00 முதல் இரவு 7:30 மணி வரை அவினாசி சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. கனரக வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.அதேபோல, நாளை காலை 6:30 முதல் 9:00 மணி வரை, அவிநாசி சாலை, காளப்பட்டி சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.குறிப்பிட்ட இந்த நேரத்தில், இந்த வழித்தடத்தில் செல்ல வேண்டியவர்கள், முன்கூட்டியே பயணத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்று, போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Share

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement