dinamalar telegram
Advertisement

இவ்வளவு டேஸ்ட்டா பிரியாணி சாப்பிட்டிருக்க மாட்டீங்க!

Share
Tamil News
அசைவ உணவு பிரியர்கள் பலரது பட்டியலில் எப்போதும் முதலிடம் பிடிப்பது, பிரியாணிதான். பிரியாணி என்றாலே பல வகை உண்டு. அதிலும், கோவை அங்கண்ணன் பிரியாணி என்றால் தனி சுவை.

கோவை ரயில்வே ஸ்டேஷன் பின்புறம், கூட்ஸ்ஷெட் ரோடு - வெரைட்டி ஹால் ரோட்டில் அமைந்துள்ளது ஸ்ரீஅங்கண்ணன் பிரியாணி உணவகம். சுடச் சுட அவர்கள் சமைத்துக் கொடுக்கும் தம் பிரியாணியின் சுவையே தனி. மதியம், 12:00 முதல் 3:00 மணி வரை, இரவு, 8:00 முதல், 10:00 மணி வரை உணவு பிரியர்கள் இங்கு சென்று ஒரு பிடி பிடிக்கலாம்.தம் பிரியாணியுடன், மட்டன் சுக்கா, ப்ரை, கைமா, தலைக்கறி, லிவர் பிரை, பிரைன் பிரை, மட்டன் வருவல், நல்லி, காடை பிரை, சிக்கன் ரோஸ்ட், சில்லி சிக்கன், நாட்டுக் கோழி பிரை பெப்பர் சிக்கன் என நீண்டுகொண்டே செல்கிறது. அதிலும், பிரைன் பிரை, மட்டன் வருவலின் சுவை மீண்டும் மீண்டும் வரத்துாண்டும்.ஒரு முறை சமைத்து, நாள் முழுவதும் பரிமாறும் பழக்கம் இங்கு இல்லை. ஒவ்வொரு மணி நேரமும், தேவைக்கு ஏற்ப சமையல் நடந்து வருகிறது. சிறிது நேரம் காத்திருந்தாலும், நல்ல தரமான உணவை உட்கொள்ளலாம். ஸ்விக்கி, ஜோமேட்டோ போன்ற செயலிகளின் வாயிலாகவும், ஆர்டர் செய்து சாப்பிடலாம்.விவரங்களுக்கு: 96261 15000.
Share
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement